Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! அட்லீயின் பாலிவுட் படத்தில் இணையும் பிரபல தமிழ் நடிகை…!!!

அட்லீ அடுத்ததாக இயக்கவுள்ள பாலிவுட் படத்தில் நடிகை பிரியாமணி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் இயக்கத்தில் வெளியான ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக இயக்குனர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

atlee sharukh khan new hindi movie shooting update

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூனேவில் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை பிரியாமணி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிரியாமணி சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |