நடிகர் சதீஷ் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மேலும் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது.
#Annaththe Dubbing 😍😍😍 தலைவர் @rajinikanth உடன் நடிக்கும் கனவை நனவாக்கிய @directorsiva sir @sunpictures …. கடவுள் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Love u all 😍😘😍 pic.twitter.com/5IKOrsQQfN— Sathish (@actorsathish) August 3, 2021
தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இயக்குனர் சிவாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.