Categories
உலக செய்திகள்

அடடே இவரா!!…. “குளிர்கால ஒலிம்பிக் போட்டி” தீப தொடர் ஓட்டத்தை தொடர்ந்த பிரபலம்….!!

நடிகர் ஜாக்கிசான் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தீப தொடர் ஓட்டத்தை இரண்டாம் நாளான இன்று சீன பெருஞ்சுவரிலிருந்து தொடர்ந்தார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் 4-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியின் இறுதி கவுண்டவுன் பாரம்பரிய தீப தொடர் ஓட்டத்துடன் நேற்று தொடங்கியது. மேலும் இந்த ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டத்தின் இரண்டாம் நாளான இன்று நடிகர் ஜாக்கிச்சான் சீன பெருஞ்சுவரில் இருந்து தீப தொடர் ஓட்டத்தை தொடர்ந்தார்.

தற்போது 62 வயதாகும் ஜாக்கிசான் ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க அதிகாலை 4 மணிக்கு எழுந்து காத்திருப்பதாகவும் இது தன்னுடைய 4-வது ஒலிம்பிக் என்றும் உற்சாகம் பொங்க கூறினார். இந்நிலையில் சீனாவில் கொரோனா  தொற்று பரவல் காரணமாக ஒலிம்பிக் தொடர்பான நிகழ்வுகளை மிகுந்த கட்டுப்பாடுகளுடன்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டில் தீப தொடர் ஓட்டம் குறைந்த தூரத்தை கடக்கும் வகையில் நடத்தப்படுகிறது.

Categories

Tech |