வாணி ராணி சீரியலில் நடித்து பிரபலமடைந்த நவ்யா சுவாமி தற்போது சித்தி- 2 சீரியலில் இணைந்துள்ளார் .
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 1999-ஆம் ஆண்டு ஒளிபரப்பான சித்தி சீரியல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த சீரியலில் ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இந்த வருடம் ஜனவரி மாதம் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. இந்த தொடரிலும் ராதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
யார் இந்த கமலி?
சித்தி 2 | உள்ளம் கேட்குமே | ஆகஸ்ட் 22 | 2 PMசித்தி 2 வின் முழு எபிசோடுகளை உடனுக்குடன் SUN NXT ல் மட்டுமே கண்டு மகிழுங்கள்!
Link: https://t.co/wyGQqwTVpx#SunTV #Chithi2 #Chithi2OnSunTV pic.twitter.com/okZ5o0s9mn
— Sun TV (@SunTV) August 19, 2021
மேலும் இந்த சீரியலில் பிரீத்தி ஷர்மா, நந்தன் லோகநாதன், மீரா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் திடீரென இந்த சீரியலில் இருந்து ராதிகா வெளியேறினார். இருப்பினும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். இந்நிலையில் வாணி ராணி சீரியலில் நடித்து பிரபலமடைந்த நவ்யா சுவாமி சித்தி-2 சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். தற்போது அவர் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.