Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா செம… சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்…!!!

டான் படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார் ‌. மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரகனி, சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Gautham Menon, Sivakarthikeyan to team up for a film- Cinema express

தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் டான் படத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கௌதம் மேனன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன், கௌதம் மேனன் இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |