சிம்பு, ஹன்சிகா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படம் நவம்பர் 25-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வாலு படத்தில் சிம்பு, ஹன்சிகா இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் இருவரும் மஹா படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.