சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் பிரபல மலையாள நடிகர் நீரஜ் மாதவ் இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கௌதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் கயடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னையில் செட் அமைத்து சில காட்சிகளை படமாக்கினர். தற்போது மும்பையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் பிரபல மலையாள நடிகர் நீரஜ் மாதவ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.