சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் இவர் இயக்கத்தில் வெளியான தர்மதுரை, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
After #Maamanithan movie this talented Actress @SGayathrie pairing with @gvprakash in our upcoming production No#2 @Kalaimagan20 @SkymanFilms@SureshChandraa @NRRaghunanthan @Vairamuthu pic.twitter.com/WvuDHPjIhS
— Seenu Ramasamy (@seenuramasamy) July 30, 2021
தற்போது சீனு ராமசாமி நடிகர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் அவர் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.