Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழையும் பிரபல நடிகை…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை ஷாலு ஷம்மு வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். அதில் திருநங்கையான நமிதா மாரிமுத்துவை போட்டியாளராக அறிவித்த விஜய் டிவிக்கு பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து நமீதா திருநங்கையாக தன்னுடைய துன்பங்களை தெரிவித்தபோது போட்டியாளர்கள்  அனைவரும் கண்கலங்கினர்.

 

Shalu Shammu Profile | Wiki | Photos | Gallery | News | Movie | Awards

ஆனால் திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவர் விலகியதன் காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்நிலையில் பிரபல நடிகை ஷாலு ஷம்மு பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஷாலு ஷம்மு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |