‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக டான்ஸிங் ரோஸ் ஷபீர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக 3 பேர் நடிக்கின்றனர்.
அதன்படி பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் ஷாக்கோ, இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பீஸ்ட் படத்தில் மூன்றாவது வில்லனாக ஷபீர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.