Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா..!! மாரி செல்வராஜின் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்… எகிறும் எதிர்பார்ப்பு…!!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் பிரபல நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

 

fahad fazil is to join in udhayanidhi movie

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பின் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் பகத் பாசில் நடிப்பார் என கூறப்படுகிறது.

Categories

Tech |