லிங்குசாமி இயக்கி வரும் ‘RAPO 19’ படத்தில் நடிகர் சிராக் ஜனி இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லிங்குசாமி. தற்போது இவர் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஆதி பின்னிஷெட்டி, நதியா, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Wishing you a very happy birthday @JaniChiragjani & a great year starting with #RAPO19 . pic.twitter.com/hV4RhXoqmp
— Lingusamy (@dirlingusamy) August 14, 2021
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சிராக் ஜனி இணைந்துள்ளதாக இயக்குனர் லிங்குசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் சிராக் ஜனி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.