புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற தியாகிகள் கவுரவிப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், புதுச்சேரியில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனை உடனடியாக உயர்த்த முடியாது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்க உள்ளது. அதில் விரிவாக பேசி ஓய்வூதியம் உயர்த்துவது சம்மந்தமாக முடிவு எடுக்கப்படும். இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் பேசி மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Categories