Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! இவ்வளவு திட்டமா ? பட்டியலிட்ட ஓ.பி.எஸ்…. வியந்து போன திமுக …!!

நேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சி எந்த குறையும் சொல்ல முடியாது ஆட்சி. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், பருவமழையின் தவறாக பொழிந்து கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் தொழில் புரட்சி,  உலகத்தில் இருக்கின்ற பணக்கார நாடுகளை எல்லாம் இங்கு அழைத்து வந்து, தொழில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி,

நாட்டினுடைய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் விவசாய புரட்சி, அனைத்து நிலைகளிலும் விவசாய பெரும்குடிமக்களுக்கு அனைத்து நிலைகளிலும் உதவிகரமாக பல்வேறு திட்டங்கள் மானியவிலையில் கொடுக்கின்றோம்.

இன்னொரு பக்கம் மாணவ செல்வங்களுக்கு பதினாறு வகையான கல்வி உப கரணங்களை தந்து படிக்க வைத்து, பட்டம் பெற வைத்து  வேலை வாய்ப்புக்கு செல்கின்ற திட்டம். இப்படி பல நிலைகளிலும் தாய்மார்கள், சகோதரிகள், நாட்டின் பெண்கள்  கண்கள்,

ஆணுக்கு பெண் சரி நிகர் என்ற நிலையை மாண்புமிகு அம்மா அவர்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற சித்தார்ந்தத்தின் அடிப்படையில் தாய்மார்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள்.

இரண்டு குழந்தைகளுக்கு பாதுகாப்பு திட்டம், தாலிக்கு தங்கம் தருகின்ற திட்டம், இப்படி பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள்  எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றோம்.

குடி மராமத்து பணியை தமிழ்நாடு முழுவதும் நிறைவாக செய்துள்ளோம். இப்படி பல நிலைகளிலும் சாதனை மிகுந்த ஆட்சியாக நம்முடைய அம்மா ஆட்சி உள்ளது. ஜீவாதார  உரிமைகளுக்கு பங்கம் ஏற்படுகின்ற பொழுது அதை தடுத்து நிறுத்துகின்ற ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. தமிழகத்தின் உரிமையை அம்மா பெற்று தந்தார்கள்.

இப்பொழுது அந்த உரிமையை நாம் தக்கவைத்து, சாதனைக்கு மேல் சாதனை செய்யும் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கின்றோம். இதை பெருக்க முடியாமல் பல பொய்களை, உண்மைக்கு மாறான சங்கதிகளை ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

பொங்கல் பரிசு, மக்கள் கொரோனாவில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என பொங்கல் பரிசாக ரூபாய் 2,500 கொடுத்தோம்.  நீட்டில் வெற்றி பெற்ற அரசு தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு கொடுத்துள்ளோம் என ஓ.பன்னீர்செல்வம் பட்டியலிட்டு பேசினார்.

அதிமுகவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் – எடப்பாடிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகின்றது என நினைத்துக் கொண்டு இருந்த திமுகவுக்கு துணை முதல்வரின் இந்த பேச்சு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |