நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராதயா பச்சனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராய் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதை தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார் . மேலும் இவர் ஹிந்தி திரையுலகிலும் பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து அசத்தி வந்தார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதயா பச்சன் என்ற அழகான பெண் குழந்தை உள்ளது . இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யாராய் தனது மகள் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆராதயா நன்றாக வளர்ந்து விட்டார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.