தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்தவர் நடிகை லாவண்யா திரிபாதி இணையதளத்தில் ரசிகர்களிடம் தனது திருமணம் குறித்து பதிலளித்துள்ளார்.
தமிழில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. தற்பொழுது தெலுங்கு திரையுலகில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். லாவண்யா திரிபாதி தனது சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர், அவ்வபோது தனது ரசிகர்களுடன் உரையாடுவார். மேலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்துள்ளார்.
சமீபத்தில் ரசிகர்களிடம் அவர் பேசுகையில் அவர் திருமணம் செய்துகொண்டது உண்மையா? என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். முதலில் எனது திருமணம் பற்றிய தகவல்கள் எதுவும் உண்மை இல்லை என்று பொறுமையாக பதிலளித்தார் லாவண்யா திரிபாதி. ஆனால் அவரிடம் ரசிகர்கள் திருமணத்தைப் பற்றியே கேள்வி மீண்டும் எழுப்பியதால். “என் திருமணம் பற்றி என்னைவிட எனது ரசிகர்களுக்கே எல்லாம் தெரிந்திருக்கிறது” என்று கேலியாக கூறினார். அதன்பிறகுதான் திருமணத்தைப் பற்றிய கேள்விகள் கேட்பதை ரசிகர்கள் நிறுத்தினார்கள்.