Categories
Uncategorized

அடடே… “உலகின் மிகப்பெரிய தாவரம்”…. ஆராய்ச்சியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு…. வைரலாகும் வீடியோ…!!!!!!

மேற்கு ஆஸ்திரேலியாவில் நீருக்கடியில் வளரும் உலகின் மிகப்பெரிய தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள விரிகுடாவில் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாவரம் சுமார் 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இது விரிந்திருக்கும் மேற்பரப்பு கிளாஸ்கோ நகரத்தை   விட சற்றே பெரியது எனவும் மன்ஹாட்டன் தீவை விட மூன்று மடங்கு பெரியது எனவும் கூறப்பட்டுள்ளது.

 

முதலில் இந்த செடியை பார்க்கும் போது அது ஒரு பெரிய கடல் புல்வெளி  என நம்புவதாகவும், ஆனால் அது ஒரு விதையிலிருந்து பரவியதாகவும் அறிவியல் சோதனையில்  தாங்கள் கண்டறிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த தாவரத்தின் வளர்ச்சியை பார்த்தால் சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |