Categories
பல்சுவை

அடடே! உலகில் இப்படியெல்லாம் கார்கள் இருக்கிறதா?…. என்ன ஓர் ஆச்சரியம்…. இதோ சில சுவாரஸ்யமான தகவல்கள்….!!

வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட 5 கார்கள் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

இன்றைய நவீன காலகட்டத்தில் தொழில் நுட்பங்களின் வளர்ச்சிக்கேற்ப மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. அதை நிறைவேற்றும் விதமாக அட்வான்ஸ் மாடல்களுடன் பல்வேறு விதமான பொருட்கள் உருவாக்கப்படுகிறது. அந்த வரிசையில் உலகில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட 5 கார்கள் குறித்து பார்க்கலாம். முதலில் Peer p50 கார் குறித்து பார்க்கலாம். இந்த கார் 3 சக்கரத்துடன் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகச் சிறிய கார் ஆகும். இந்த கார் கடந்த 2010-ஆம் ஆண்டு உலகின் மிகச் சிறிய கார் என்ற கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது. இந்தக் காரை பீல் இன்ஜினியரிங் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த காரில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்த கார் 100 சென்டிமீட்டர் உயரம், 134 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 98 சென்டிமீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இந்த கார் 53 கிலோ இருக்கும்.

இத்தாலி நாட்டிலுள்ள வெனிஸ் நகரம் நீரினால் சூழப்பட்ட நகரமாகும். இங்கு கார்களை இயக்குவது என்பது சாத்தியம் கிடையாது. இதன் காரணமாக மரவேலை செய்யும் ஒருவர் காரின் மீது இருந்த ஆசை காரணமாக மரத்தாலான Firrari என்ற காரை உருவாக்கினார். இந்த கார் படகின் என்ஜின் பொருத்தப்பட்டு நீரில் இயங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டினா சோசொனா என்பவரால் Colim என்ற கார் உருவாக்கப்பட்டது. இது கார் மற்றும் கேரவனை இணைத்து உருவாக்கப்பட்டது ஆகும். இதனால் கார் மற்றும் கேரவனைத் தனியாகப் பிரித்துக் கொள்ளலாம். இது சுற்றுலா செல்வதற்கு ஏற்ற காராக கருதப்படுகிறது.

பிரபல ஹாலிவுட் ஹீரோவான அர்னால்டு திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு காரை போன்று உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் Lotus submarine என்ற கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சம் என்னவென்றால் இதை சாலையிலும் ஓட்ட முடியும், நீருக்கடியில் நீர்மூழ்கி கப்பல் போன்றும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த காரின் விலை இந்திய மதிப்பில் 11 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும்.

உலகின் மிக நீளமான காராக The longest limousine என்ற கார் இருக்கிறது. இதன் நீளம் சுமார் 100 அடி ஆகும். இந்த கார் 26 சக்கரங்கள் கொண்ட சொகுசு கார் ஆகும். இந்த காரில் பெட்ரூம், ஏசி, நீச்சல் குளம், ஹெலிகாப்டர் இறங்கும் தளம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது. இந்த காரின் உள்பகுதி பார்ப்பதற்கு வீடு போன்ற தனித்தனி அறைகளாக அமைக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |