இந்திய விமானப்படை பெண் அதிகாரி ஷ்ருதி சவுகான்(38) சிகாகோவில் நடைபெற உள்ள திருமணமான பெண்களுக்கான திருமதி(கலாக்சி)போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்க இருக்கிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மிஸஸ் இந்தியா உலக அழகிப்போட்டியில் 2-வது இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த இவர் கடந்த 16 ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
Categories