நெசவாளர் பறவைகள் பிளாசிடே குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இந்த பறவைகள் கட்டும் கூடுகளால் மற்ற பறவைகளில் இருந்து தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்த பறவைகள் புற்கள், நாணல்கள் மற்றும் பிற தாவரங்களால் சிக்கலான கூடுகளை உருவாக்குகின்றது. இந்த பறவைகள் கூடு கட்டும்போது அதில் ஒரு பொய்யான வழியையும், உண்மையான வழியையும் செய்யும். இதன் மூலமாக பாம்புகள் மற்றும் மற்ற உயிரினங்களிடமிருந்து தங்களுடைய கூடு மற்றும் முட்டைகளை பாதுகாத்துக் கொள்கிறது.
அதாவது பொய்யான வழியில் பாம்புகள் நுழையும்போது அவற்றால் கூட்டுக்குள் செல்ல முடியாது. ஏனெனில் பறவைகள் உண்மையான வழியை மற்றவர்களுக்கு தெரியாத அளவிற்கு மூடி வைத்து விடும். இந்தப் பறவைகளின் கூடுகள் உருண்டை மற்றும் கூம்பு வடிவில் இருக்கும். இந்த நெசவாளர் பறவைகள் நிறம், வடிவம் போன்றவற்றில் வேறுபட்டு பல்வேறு விதமாக காணப்படுகிறது. இந்த நெசவாளர் இனத்தைச் சேர்ந்த பறவைகளை ஆராய்ச்சியாளர்கள் ரெட் பில்ட் கியூலியா அதாவது உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான காட்டுப் பறவைகள் என அழைக்கின்றனர்.