நல்ல சாலை, நல்ல பாலம் கட்டி கொடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் கொண்டார்.
நேற்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக முதலவர், ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவன் திறமையானவராக இருந்தபோதும் பொருளாதார சூழ்நிலையால் தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த ஏழை எளிய மாணவனுக்கு அரசு இருக்கிறது அம்மா இருக்கிறார் என்று சொல்லி பொது வரை அனைத்து பகுதியிலும் அரசு கலைக்கல்லூரியில் இடம் அளிக்கின்றோம் .இதனால் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
நமது நங்கவள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட வனவாசிகள் பாலிடெக்னிக் கல்லூரியை கொடுத்துள்ளோம். அங்கேயே தங்கிப் படிப்பதற்கு விடுதியும் கட்டிக் கொடுத்துள்ளேன். ஒரு மாதத்துக்கு முன்புதான் அந்த விடுதியும் திறந்துவைக்கப்பட்டது .ஆகவே எமது அரசு மக்களின் அரசு மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசு ஏழை எளிய ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட ஏழை மக்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வேண்டும் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்க வேண்டும் அதுதான் எங்கள் இலட்சியம்.
அதற்கு நாங்கள் எடுத்த நடவடிக்கைகளும் பலன் தந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே 49% உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 49 சதவீதமாக இருந்து. இந்திய அளவில் இன்று உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை 49 சதவீதம் எடுத்து முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி கொண்டிருக்கின்றது. புரட்சித்தலைவி அம்மா இருக்கின்ற பொழுதிலும் சரி எமது அரசு தொடங்கிய பொழுதிலும் சரி தொடர்ந்து கவனம் செலுத்தி புதிய புதிய கல்லூரிகளை திறந்து அதன் விளைவு உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோன்று குடிநீர்ப் பிரச்சனை இடத்தில் வேட்பாளராகப் போட்டியிட்டபோது மக்கள் கோரிக்கை வைத்தனர். பாதுகாக்கப்பட்ட காவிரி நீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று இன்று கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது என் அரசு. இன்னும் கூடுதலாக தண்ணீர் வேண்டும் என்று நந்த வெள்ளி பேரூராட்சி வனவாசி போன்ற பகுதியில் இருக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனை நிறைவேற்ற தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கும் முழுமையான குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இப்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஊராட்சி ஒன்றிய கட்டிடம் வேண்டும் என்று கேட்டார்கள். அந்த கட்டிடத்தையும் பத்து நாட்களுக்கு முன்புதான் இங்கு வந்து திறந்து வைத்தேன் பாலிடெக்னிக் திறந்துவைத்த இடத்தின் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது. அதனை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்றி கொடுத்துள்ளேன். கால்நடை மருத்துவம் வேண்டும் என்று கேட்டார்கள் அதனையும் கொடுத்தோம். இன்று அம்மா மினி கிளினிக் அதையும் நான்தான் திறந்து வைத்துள்ளேன்.
நல்ல சாலை வசதிகள் எந்த பக்கம் திரும்பி பார்த்தாலும் நல்ல சாலைகள் எங்கெல்லாம் பாலம் தேவையோ அங்கெல்லாம் பாலம் கட்டி கொடுத்துள்ளோம். போக்குவரத்து வசதி வேண்டும் என்று கேட்டார்கள். நெசவு செய்யும் மக்கள் அவர்கள் செய்த சேலையை விற்பனை செய்ய அவர்கள் ஊரில் இருந்து பெங்களூர் செல்ல பேருந்து வசதி செய்து கொடுத்தோம். தேர்தல் நேரத்தில் கோரிக்கை வைத்தார்கள். நாங்கள் கோயம்புத்தூர் செல்ல வேண்டும் என்று அதற்கும் எமது அரசு தான் பேருந்து வசதி செய்தது. மக்கள் என்னென்ன கேட்டார்களோ அத்தனையும் நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் செய்து கொடுத்து உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.