நீலகிரி மாவட்டம் குன்னுர் சிங்க்ஸ் பூங்காவில் நீல குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவதால் அதைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
குன்னூர் சிங்க்ஸ் பூங்காவில் நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளனர். ஆண்டுதோறும் இரண்டாவது சீசனுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில் அவர்களை கவர்வதற்காக லட்சக்கணக்கான ஸ்டேபிலாந்தஸ் மினியேச்சர் வகை நிலக்குறிஞ்சி மலர்களை நூற்றுக்கணக்கான தோட்டகலை துறையினர் நடவு செய்தனர். தற்போது அவை பூக்க தொடங்கியுள்ளது. இந்த குறிஞ்சி மலர்கள் சிங்ஸ் பூங்காவின் நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் பூத்து குலுங்குவது பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.