Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடடே என்ன ஒரு பிரம்மாண்ட தோற்றம்..! பூப்பல்லக்கில் வலம் வந்த மாரியம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் பூப்பல்லக்கு வீதி விழா கோலாகலமாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்டது. கடந்த 14-ஆம் தேதி இந்த கோவிலில் பங்குனி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் தினம் ஒரு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி மாரியம்மன் பூப்பல்லக்கில் திருவீதி உலா வந்தார். கோவிலில் இருந்து ஆரம்பித்த வீதி உலா நால்ரோடு, மெயின் பஜார், பெரிய காளியம்மன் கோவில் வழியாக மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது. அம்மனுக்கு ஒவ்வொரு மண்டகப்படிதாரர்களும் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதையடுத்து மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. பெண்கள் அப்போது முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து அம்மன் பூஞ்சோலை வந்தடைந்தார்.

இந்த திருவிழாவில் நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் யாகப்பன், வர்த்தக சங்கத் தலைவர் பிரபாகரன், நகர செயலாளர் சேகர், மு.வ.அமுல்ராஜ் அன்கோ உரிமையாளர் அசோகன், நகர பொருளாளர் பூக்கடை சரவணன், எஸ்.தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர் முனியப்பன், நகர துணைச் செயலாளர் முத்து, தி.மு.க. நகர நிர்வாகிகள் பால் ரத்தினராஜ், ஜோசப், ஸ்ரீ கண்ணன் மோட்டார்ஸ் நவநீதகிருஷ்ணன், மு.வ.மாணிக்கம் அன்கோ உரிமையாளர் ஜெயச்சந்திரன், நகர செயலாளர் சேகர், அ.தி.மு.க முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார், வீலிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வீருசின்னுமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான முன்னேற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை காரியதரிசிகள் பாண்டியராஜன், சுரேஷ்பாபு, சுசீந்திரன், ஜெயபாண்டியன், கருமலை பாண்டியன், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Categories

Tech |