மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடைபயணத்தின் போது ராகுல் காந்தியை ஷீத்தல், லகானியா, கிரிஜா ஆகிய 3 மாணவிகள் சந்தித்து பேசினார். இந்த மாணவிகளிடம் அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால லட்சியம் குறித்து ராகுல் காந்தி கேட்டார். அதன் பிறகு மாணவிகள் தங்களுக்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்பதுதான் லட்சியம் என்று கூறினார்.
கடந்த 8-ம் தேதி ராஜஸ்தானில் ராகுல் காந்தி தன்னுடைய நடை பயணத்தை தொடங்கிய நிலையில், பண்டி பகுதியில் இருந்து மாதோபூருக்கு ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பயணத்தின் போது மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவிகள் கிரிஜா, ஷீத்தல் மற்றும் லகானியா ஆகிய 3 மாணவிகளையும் ராகுல் தன்னுடன் அழைத்துச் சென்றார். இந்த மாணவிகள் சுமார் 20 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்த நிலையில் அவர்களுக்கு ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து சொல்லப்பட்டது. மேலும் மாணவிகளின் ஆசையை ராகுல் காந்தி நிறைவேற்றியது தற்போது பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.