இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகள் பெற்ற ஒரே செலிபிரிட்டி என்ற கைல் ஜென்னரின் அந்தஸ்தை ஒரு முட்டை படம் முறியடித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் கடந்த 3 வருடங்களாகவே 55.5 மில்லியன் லைக்குகளை பெற்ற ஒரு முட்டை படம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த முட்டை படம் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளைப் பெற்ற ஒரே செலிபிரிட்டி என்ற கைல் ஜென்னரின் அந்தஸ்தை முறியடித்துள்ளது. இந்த முட்டை படத்தின் கணக்கின் பெயர் இன்ஸ்டாகிராமில் “தி வேர்ல்ட் ரெக்கார்ட் ஆப் தி எக்” என்றே உள்ளது.
இதனை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியவர் இந்த முட்டை படத்திற்கு அதிகமான லைக்குகளைப் போட்டு பிரபல கைல் ஜென்னரின் 18 மில்லியன் லைக்குகளை முறியடிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆகையினாலேயே இந்த முட்டை படம் தொடர்ந்து 3 வருடங்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னிலை பெற்று வருகிறது.