நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நடிகை சமந்தா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து புகழ், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, காளி உள்ளிட்ட பலர் டான் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் புரோடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை அனுதீப் இயக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை மடோனா அஸ்வின் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் இணைந்து சீமராஜா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள அயலான் திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.