தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி கொம்பன் படத்தை இயக்கிய, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, கருணாஸ், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த விருமன் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனையடுத்து விருமன் திரைப்படம் வெற்றி பெற்றதால், படக்குழு ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் நடிகர் சூர்யா, கார்த்தி, பிரகாஷ்ராஜ் உட்பட பலர் தங்களுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் கார்த்தியுடன் அதிதி சங்கர் கபடி விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
#Viruman | விருமன் திரைப்படத்தின் வெற்றியை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடிய படக்குழு. #Suriya | #Karthi | #AditiShankar @Karthi_Offl | @AditiShankarofl | @2D_ENTPVTLTD pic.twitter.com/8knP9Q4wMK
— Senthilraja R (@SenthilraajaR) August 16, 2022