Categories
உலக செய்திகள்

அடடே… கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு rolls-royce கார் பரிசளித்த காதலி…. திகைத்துப் போன ரொனால்டா…!!!!!

கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அவரது காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசாக ரூ.7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதனை பார்த்த ரொனால்டோ திகைத்துப் போய் நின்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரொனால்டோ தன்னுடைய புதிய வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோ அவருடைய புதிய காரை பார்த்து திகைத்துப் போய் நின்ற முழு காட்சியையும் பகிர்ந்துள்ளார். ரொனால்டோ ஒரு கார் பிரியர் அவர் தன்னுடைய கேரேஜில் பல சுவாரசியமான கார்களை வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |