உலகத்தில் மிகவும் சிறிய அளவிலான பசுமாடு குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
நாம் அனைவரும் பசுமாட்டை பார்த்திருப்போம். ஆனால் உலகத்திலேயே மிகச்சிறிய அளவிலான பசுமாடு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம் அப்படி ஒரு பசுமாடு இருக்கிறது. அதாவது பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஒரு பசு மாடு 51 சென்டிமீட்டர் உயரமும் 66 சென்டிமீட்டர் நீளமும் இருக்கிறது. இந்த பசு மாட்டிற்கு 2 வயது ஆகிறது. இந்தப் பசு மாடு உலகத்திலேயே மிகச்சிறிய அளவிலான ஆகும். இதன் காரணமாக சிறிய அளவிலான பசு மாடு என்ற சிறப்பினை பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.