பத்திரிகையாளர் சந்திப்பின்போது நஸ்ரியாவிடம் “அடடே சுந்தரா” திரைப்படம் பற்றி நிருபர் கேட்ட கேள்விக்கு தரமான பதிலளித்துள்ளார்.
மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார் நஸ்ரியா. இவர் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார். இவர் தனது கியூட் ரியாக்ஷன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பொழுதே தனது காதலரான நடிகர் பாஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சிறிது காலம் நடிக்காமல் இருந்த நஸ்ரியா அவ்வப்போது மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது அடடே சுந்தரா என்ற திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்கின்றார்.
இந்த நிலையில் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நஸ்ரியாவிடம் பத்திரிக்கையாளர் திரைப்படத்தில் தமிழ் பையனின் மனைவியாக லீலா தாமஸ் என்ற கிறிஸ்தவ பெண்ணாக நடித்திருக்கீர்கள். கதையை தேர்ந்தெடுப்பதில் என்ன சிரமங்களை எதிர்கொண்டு எந்த கட்டத்தில் இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்தீர்கள்? என கேட்டுள்ளார்.
இதற்கு நஸ்ரியா கூறியுள்ளதாவது, நான் ஸ்கிரிப்டை விரும்பினேன். அதை விவேக் என்னிடம் விவரித்துக் கூறிய போது எனக்கு மிகவும் பிடித்தது. லீலா தாமஸ் வேடத்தில் நடிக்க நான் எதையும் பெரிதாக செய்யவில்லை. நான் தாமஸ் வேடத்தை புரிந்து கொண்டு அதற்கு தேவையானதை மட்டுமே இயக்குனர் என்ன விரும்பினாரோ அதை செய்து கொடுத்திருக்கின்றேன்” என கூறியுள்ளார்.