Categories
மாநில செய்திகள்

அடடே…! சுற்றுசூழலை மேம்படுத்த…. தமிழக அரசுப்பள்ளிகளில் சூப்பர் திட்டம் அறிமுகம்….!!!

நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுடைய கல்வித்தரத்தை மேம்படுத்தும் விதமாகவும், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மூலமாக மாணவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக அரசு பள்ளிகளில் புதிய திட்டம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக “இயற்கை பணி” என்ற திட்டம் அறிமுகம் செய்யபட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி மாணவர்கள் சுற்றுச்சூழல் மேம்பாட்டு செயல்பாடுகள் மற்றும் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதனால் மாநிலத்தில் தூய்மையான சுற்றுச் சூழலை உருவாக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |