Categories
மாநில செய்திகள்

அடடே!…. சூப்பரா மாறிப்போச்சு போங்க….. வேற லெவலில் அப்டேட் ஆன MTC பேருந்துகள்…. உற்சாகத்தில் சென்னை மக்கள்…..!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு வரலாற்று சிறப்பு வாய்ந்த காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு “முதலமைச்சர் காலை உணவு திட்டம்” என்று பெயரிட்டப்பட்டுள்ளது. இது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளியில் முதல் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வெவ்வேறு விதமான உணவுகள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க மாநிலம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் படிப்பதில் ஆர்வம் அதிகரிப்பதாக பள்ளி மாணவ, மாணவிகளை பேச தொடங்கினர்.

அதிலும் பள்ளி இடைநீற்றல் பெரிதும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து பல்வேறு செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் புகழ்ந்து எழுதியுள்ளனர். இந்நிலையில் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெறக்கூடிய வகையில் சென்னை மாநகர பேருந்துகள் மாற்றப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளை பொறுத்தவரை தனியாரின் விளம்பரங்கள் தான் பெரும்பாலும் இடம்பெற்று வந்தது. தற்போது அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்து சொல்லக் கூடிய வகையில் திமுக அரசு இத்தகைய புதிய ஏற்பாடு செய்துள்ளது. மேலும் தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம் குறித்து விழிப்புணர் ஏற்படுத்தக்கூடிய வகையில் மாநகர பேருந்துகளில் வண்ணம் பூசி படங்கள் வரைந்து அழகிய முறையில் விளக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமை பெண் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் புதிதாக மாற்றப்பட்டுள்ள சென்னை மாநகர பேருந்துகள் பார்ப்பதற்கு பெரிது கவர கூடிய வகையில் அமைந்துள்ளது.

Categories

Tech |