இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் நான்கு வருடங்கள் இளைஞர்கள் சேவையாற்றும் விதமாக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர்களுக்கு மத்திய அரசு கீழ்கண்ட பல சலுகைகளை வழங்கியுள்ளது. அதன்படி சேவையின் போது அக்னி வீரர்கள் பெறும் பயிற்சியை பட்டப்படிப்புக்கான மதிப்பீடாக அங்கீகரிக்க நடவடிக்கை. இந்த திட்டத்தில் ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் சேவைக்கு பின் பிற துறைகளில் வேலை பெற ஏற்பாடு.
கல்வித் திட்டத்தை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக வடிவமைத்துள்ளது. அக்னி வீரர் பெறும் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் சாராத 50 சதவீத திறன் பயிற்சி இளநிலை பட்ட மதிப்பீடாக கருதப்படும். எஞ்சிய 50% மொழி, பொது நிர்வாகம், வணிகவியல் போன்ற பாடங்கலில் பெரும் பயிற்சியிலிருந்து மதிப்பீடு.