மொபைல் போன்கள் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று முன்னேறி வருகிறது. தற்போது மடக்கி வைக்கும் அளவிற்கு புதிய அவதாரம் எடுத்துள்ளது. மேலும் பல்வேறு முன்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள் டோல்டபிள் போன்களை வடிவமைத்து வருகிறது. அதன்படி, மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ மடிக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போன்களை முதல்முறையாக தயாரித்துள்ளது.
INNO DAY 2021 என்ற நிகழ்வில் ஓப்போ நிறுவனம் இந்த போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம்.
7.10 இன்ச் பிரைமரி டிஸ்ப்ளே குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 ப்ராஸசர், 32 மெகா பிக்சல் ஃப்ராண்ட் கேமரா, 50 எம்பி + 16 எம்பி + 13எம்பி என 3 கேமரா ரியர் சைடில் உள்ளது. 8ஜிபி ராம், 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 4500mah பேட்டரி, ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளம் பிங்சர்ப்ரின்ட் ஸ்கேனர், டீயூயல் ஸ்பீக்கர் சிஸ்டம் 5.49 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே இது போன்ற சிறப்பு அம்சத்தை இந்த போன் கொண்டுள்ளது. மேலும் இதன் சந்தை விலை மற்றும் விற்பனை எப்போது என்பதை விரைவில் ஓப்போ தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.