Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. ஆதார் கார்டு மட்டும் போதும்…. ஆஃப்லைனில் வங்கி பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம்…. எப்படி தெரியுமா…?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டையை வங்கி கணக்கு எண், பான் கார்டு எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை இணைத்த பிறகு ஆதார் அட்டை எண்ணை பயன்படுத்தி வங்கியில் உள்ள இருப்பு தொகையை தெரிந்து கொள்ளலாம். இதற்கு ஆன்லைன் இணைப்பு கட்டாயம் இல்லை.

இதனையடுத்து செல்போன் மூலம் ஆதார் அட்டையை பயன்படுத்தி சேமிப்பு கணக்கில் உள்ள இருப்பு தொகையை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட சேமிப்பு கணக்கிலிருந்து *99*99*1# ஐ டயல் செய்ய வேண்டும். அதன்பின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளீடு செய்து சரியாக இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும். அதன் பிறகு UIDAI-யிலிருந்து உங்களுடைய செல்போனுக்கு மெசேஜ் மூலம் வங்கியில் உள்ள இருப்பு தொகை காட்டப்படும்.

Categories

Tech |