இந்தியாவில் 5G தொலை தொடர்பு சேவையை சென்ற அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இப்போது உள்ள 4G சேவையைவிட 10 மடங்கு அதிக வேகம் கொண்ட 5G சேவையை, அடுத்த 2 வருடங்களில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்தியாவின் முன்னனி தொலை தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் பார்திஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா நகரத்தில் 5G சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி இன்று துவங்கி வைத்தார். அங்கு உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் நடந்த அறிமுக விழாவில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். முன்பே சென்னையில் 5G சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், படிப் படியாக ஒவ்வொரு நகரங்களுக்கும் 5ஜி சேவை கொண்டுவரப்படும் என அவர் கூறியுள்ளார்.