கடந்த சில வருடங்களாகவே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே தற்போது விற்கப்படும் பொருட்களின் சலுகைகள் மட்டுமே அதனை வாங்கும் பொது மக்களின் நோக்கமாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகளோ தாங்கள் ஆட்சியை பிடிக்க நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு உபயோக பொருட்களை இலவசமாக வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதிகளாக அழித்து வருகின்றனர். மேலும் வலைதளங்களில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு மக்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்திற்கும் சலுகைகளை அறிவித்து விற்பனை செய்து வருகின்றது.
இதிலிருந்து விலக்கு பெற்றது திருமணங்கள் மட்டுமே என்று இருந்த நிலையில் தற்போது திருமண மண்டபங்களும் இந்த முறையை கையாள இறங்கியுள்ளது. ஒரு பக்கம் அதிர்ச்சியும் மற்றொரு பக்கம் திருமண வீட்டாருக்கு மகிழ்ச்சியும் அளித்திருக்கிறது. இந்த திருமண மண்டப நிர்வாகத்தின் ஆஃபர் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் குருவிமலை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாலாற்றின் கரையோரம் மற்றும் அமைதியான சூழ்நிலையில் பன்னீர் மஹால் திருமண மண்டபம் அமைந்திருக்கிறது. தற்போது திருமண வீட்டாரும் அனைத்து வசதிகளான பார்க்கிங் குளிர்சாதன வசதி, விசாலமான மண்டபம், போக்குவரத்து நெறிசல் பகுதி என எதிர்பார்க்கும் அனைத்துவித வசதிகளுடன் இந்த மண்டபம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த திருமண மண்டபத்தை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதால் வரும் 2023 ஜனவரி 1 முதல் திருமணம் செய்யும் மணமக்களுக்கு பரிசாக மணமக்களின் வளைகாப்பு திருமண மண்டபம் கட்டணம் இலவசம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருமண மண்டபம் நிகழ்விற்கு 75,000 கட்டணம் என்ற நிலையில் வளைகாப்பு நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு 25,000 கட்டணம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து காஞ்சிபுரம், உத்திரமேரூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு முன் பெரிய அளவில் பக்கமும் விளம்பரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த விளம்பரம் அந்த வழியாக செல்பவர்களை ஒரு நிமிடம் நின்று பார்க்கும் அளவிற்கு இருக்கிறது.