உலக அளவில் பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் வாட்ஸ்அப் அதன் வெப் பதிப்பில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றது. தற்போது புதிய அப்டேட்டை நிறுவனம் சோதனை செய்து வருவதாக WABetalnfo தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராமில் உள்ள அம்சங்களை போல வாட்ஸ் அப் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகின்றது. இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிகளுக்கு எமோஜி மூலமாக விரைவாக பதிலளிக்க அனுமதிக்கின்றது. அதனைப் போன்ற அம்சத்தினை முதலில் வாட்ஸ்அப் வெப் தளத்தில் கொண்டுவர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பொதுவாகவே இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு எளிதாக ரிப்ளை கொடுக்க 8 எமோஜி ககொண்ட ஈமோஜி பேனலை நீங்கள் காணலாம். ஸ்கிரீன் ஷாட் படி, டெக்ஸ்டாப்பில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும்போது ஸ்டேட்டஸ்களுக்கு உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்க 8 எமோஜி கல்வி கொடுக்கப்பட உள்ளது. இன்ஸ்டாகிராம் செடியை போலவே இதில் இருக்கும். அவை இதயம்-கண்களுடன் சிரிக்கும் முகம், ஆனந்த கண்ணீருடன் முகம், திறந்த வாய், அழும் முகம், மடிந்த கைகள், கைத்தட்டல் கைகள், பார்ட்டி பாப்பர், 100 புள்ளிகள் இருக்கும்.
நீங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்க்கு பதில் அளித்தால் அவை அரட்டையின் செய்தியாக காட்சியளிக்கும். இந்த சிறப்பு அம்சம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. சோதனை முயற்சியில் உள்ள இது விரைவில் பயனர்களுக்கு அப்டேட் மூலம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.