Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்… “இனி இ -சேவை மையத்திலே எல்.எல்.ஆர் பெற முடியுமா”…? வெளியான தகவல்…!!!!!

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் தமிழக போக்குவரத்து துறை மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தம் நிறைவு பெற்றதும் விரைவில் இ- சேவை மையத்திலே எல்.எல்ஆர் எனப்படும் பயிற்சி ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வருடம் தொடக்கத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இனி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம். அதற்கு பதிலாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக “பரிவாகன்” எனும் இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆன்லைன் மூலமாக அனைவராலும் இந்த வசதியை பயன்படுத்த முடியாத நிலை நீடித்து வந்ததால் பலரும் நேரடியாக ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையே இருந்து வந்தது. இதனை தவிர்ப்பதற்காக தற்போது தமிழக போக்குவரத்து துறை தமிழ்நாடு இ-ஆளுமை முகமையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இயங்கும் 100 இ -சேவை மையங்கள் மூலமாக இந்த ஆன்லைன் வசதியை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கூறப்படுகின்றது. இனி ஓட்டுநர் பயிற்சி உரிமம் எடுப்பவர்கள் விரைவில் இ- சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து எல்.எல்ஆர் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலமாக மக்கள் இனி ஓட்டுனர் உரிமத்திற்கான பயிற்சி மற்றும் வாகன தகுதி சான்றிதழ் பெற மட்டுமே ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருக்கும் என கூறப்படுகின்றது.

Categories

Tech |