உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது 35 ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த தக்காளி மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று காலை தக்காளி விலை கிலோ 40 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும், பல்லாரி கிலோ 35 ரூபாயாகவும்,
அவரக்காய் 40 ரூபாய்க்கும்,முருங்கைக்காய் 180 ரூபாய்க்கும் மற்றும் கேரட் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.