Categories
டெக்னாலஜி

அடடே சூப்பர்!… இனி டுவிட்டரில் எடிட் பண்ணலாம்…. BUT ஒரு கண்டிஷன் இருக்கு…..!!!!!

இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியான பராக்அகர்வால் சில தினங்களுக்கு முன்பே டுவிட்டர் இனி தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் என கூறியிருந்தார். சர்ச்சைகள், புகார்கள் என டுவிட்டர் குறித்த பரபரப்பான செய்திகளுக்குக் குறைவே இல்லை. எனினும் புது அம்சம் குறித்த செய்தி வெளியிட்டு டுவிட்டர், தலைப்புசெய்தியில் இடம்பெற்றுள்ளது. பல யூசர்களும் பல்வேறு வருடங்களாக காத்துக்கொண்டிருந்த டுவிட்டரில் பதிவுகளை “திருத்தும்” அம்சம் வெளியிட உள்ளதாக டுவிட்டர் அதிகாரப்பூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த முழு விபரங்களை இங்கே பார்க்கலாம்.

டுவிட்டரில் ஒரு பதிவை டுவீட் செய்த பிறகு அதனைத் திருத்த முடியாது. டுவிட்டர் யூசர்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் பதிவுகளைத் திருத்தும் விருப்பத்தை டுவிட்டர் வழங்கவேயில்லை. எடிட்ஆப்சன் சேர்க்கலாமா? வேண்டாமா? என ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது. அதற்கு டுவிட்டர் 2 தரப்பாகப்பிரிந்து விவாதித்தது. இந்நிலையில் டுவிட்டர் எடிட் அம்சத்தை உலகம் முழுவதிலும் நடைமுறைபடுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த எடிட்ஆப்சன் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய தகவலை, நிறுவனம் தன் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கின் வழியே வெளியிட்டு உள்ளது. ஒரு டுவிட் எடிட் செய்யப்பட்டது என பார்த்தால் அக்கணக்கில் எடிட்அம்சம் உள்ளது என்று அர்த்தம் ஆகும்.

இப்போது இந்த விருப்பத்தை டெஸ்ட்செய்து வருகிறோம் என டுவிட்டர் தெரிவித்து இருந்தது. எடிட் அம்சத்தில் ஒரு டுவிட் கடைசியாக எடிட்செய்யப்பட்டது என்ற ஒரு லேபிளுடன் ஒரு பென்சில் ஐகான் காணப்படும். அதன்படி ஒரு பதிவு எப்போது எடிட் செய்யப்பட்டது எந்த விவரம் அதில் குறிப்பிட்டிருக்கும். இருப்பினும் இந்த எடிட் அம்சம் அனைத்து யூசர்களுக்கும் தற்போது அறிமுகம் செய்யப்படவில்லை. அதாவது கட்டணம்செலுத்தும் யூசர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த புது அம்சம் அமெரிக்கா, கனடா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே கிடைக்கும் என்பதையும் அறிவித்து இருக்கிறது. டுவிட்டரில் “திருத்தும்” அம்சம் தேவைப்படுபவர்கள், மாதாமாதம் $4.99 கட்டணம் செலுத்த வேண்டும். இது இந்திய மதிப்பில் 400 ரூபாய் ஆகும். உலகம் முழுதும் இந்த அம்சம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தாலும் கட்டணம் செலுத்தி எடிட்செய்யும் அம்சத்தைப் பெற வேண்டும் என்பதை எத்தனை யூசர்கள் விரும்புவார்கள் என தெரியவில்லை. நிறுவனத்துக்கு இது சாதகமான முடிவாக இருந்தாலும் இந்தியா போன்ற நாடுகளில் கட்டணம் செலுத்தி சேவைபெறுவது என்பது அந்த அளவுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தாது. இது மிகவும் முக்கியமான அப்டேட்டாக உள்ளதால் இந்தியாவில் அனைத்து யூசர்களுக்கு இலவசமாக எதிர் காலத்தில் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |