Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!… இனி திருப்பதி மலைப்பாதையில்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு போகும் மலைப் பாதையில் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 300 பேருந்துகள் மலைப் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எரிப்பொருள் செலவை மிச்சப்படுத்தவும் மலைப்பாதையில் மின்சார பேருந்து இயக்கப்படவுள்ளது. இதற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அனுமதி வழங்கியுள்ளார்.

ஒலெக்ர்டா நிறுவனத்தின் தயாரிப்பான புது மாடல் எலக்ட்ரிக் பேருந்து இன்று திருப்பதிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த பேருந்துகளை இயக்கும் நிர்வாகபொறுப்பு மெகா என்ஜினியரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்த எலக்ட்ரிக் பேருந்தில் 36 இருக்கைகள், குளிர் சாதன வசதி, கண்காணிப்பு கேமரா தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது. பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ வரை இந்த பேருந்தை இயக்க முடியும்‌.

வரும் 25ஆம் தேதிக்கு முன்பு இன்னும் 10 பேருந்துகள் வர இருக்கிறது. ஏழுமலையான் கோயிலில் வரும் 27-ஆம் தேதி பிரமோற்சவவிழா துவங்குகிறது. இந்நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க இருக்கிறார். அன்று இந்த எலக்ட்ரிக் பேருந்துகளை அவர் தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர். திருப்பதியில் நேற்று 64,292 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். 30,641 நபர்கள் முடி காணிக்கை செலுத்தினர். அத்துடன் ரூபாய்.3.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Categories

Tech |