Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. இனி வாட்ஸ் அப்பில் இதுவும் பண்ணலாம்?…. மத்திய அரசு போட்ட பலே திட்டம்….!!!!

இந்திய போஸ்ட் பைமெண்ட் பங்க் இன் இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் வங்கி சேவைகளும் நிதி சேவைகளும் வேகமாக டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி டிஜிட்டல் சேவைகளை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்காக வாட்ஸ் அப்பில் வங்கி சேவைகளை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலி மூலமாக வங்கி கணக்கு தொடங்குவது,வங்கி கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகை எவ்வளவு என்பதை பார்ப்பது மற்றும் பாஸ்வேர்ட் மாற்றுவது உள்ளிட்ட அனைத்து அடிப்படை வங்கி சேவைகளை அறிமுகம் செய்வதற்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக வாட்ஸ்அப் நிறுவனத்துடன் தபால்துறை கூட்டணியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

முதலில் அடிப்படை வங்கி சேவைகளை வாட்ஸ் அப் செயலியில் அறிமுகம் செய்த பிறகு படிப்படியாக மற்ற அனைத்து சேவைகளும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது குறிப்பிட்ட சில பயனர்கள் மட்டுமே வாட்ஸ் அப் செயலி மூலமாக பணம் எடுப்பதற்கான கோரிக்கையை விடுதல், ஆதார் -ஆதார் பரிவர்த்தனை மற்றும் பான் நம்பர் அப்டேட் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்பிறகு பார்சல் புக்கிங், சம்பள கணக்கு, சேமிப்பு கணக்கு,சம்பளம் வாங்குவது மற்றும் நடப்புக் கணக்கு தொடங்குவது ஆகிய சேவைகளையும் வாட்ஸ் அப் செயலி மூலமாகவே மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இது விரைவில் அமலுக்கு வர உள்ளதால் வாட்ஸ்அப் பயனர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |