Categories
பல்சுவை

அடடே சூப்பர்…. இனி வெங்காயம் நறுக்கும் போது கண் எரியாமல் இருக்க…. இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க….!!!!

வெங்காயம் நறுக்கும் போது நாம் அனைவருக்கும் கண் எரிச்சல் ஏற்படுவது வழக்கம்தான். அதிலும் சிலருக்கு வெங்காயம் நறுக்குவது அறவே பிடிக்காது. அதற்கு காரணம் வெங்காயம் நறுக்கும் போது கண்களில் இருந்து தண்ணீர் வடியும். வெங்காயத்தில் மிக அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சல்பர் அதிகம் நிறைந்துள்ளதால் வெங்காயம் இல்லாத சமையலை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் மற்ற காய்கறிகளை விட வெங்காயத்தை நறுக்கும்போது ஏன் கண் எரிகிறது என்று உங்களுக்கு தெரியுமா?..

வெங்காயத்தில் அதிக அளவு சல்பர் இருப்பதால், அதனோடு வேறு சில நொதிகளும் சேர்ந்து நறுக்கும்போது காற்றில் கலக்கின்றது. அதனால்தான் கண் எரிச்சல் ஏற்படுகிறது. இதற்கு காரணமும் தீர்வும் தேடாமலே பல காலமாக வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு இருக்கிறோம். இதிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ் உள்ளது. வெங்காயத்தை நறுக்கும் போது அதனைப் பின்பற்றினால் போதும் கண்களில் இருந்து கண்ணீர் வராமலும் எரிச்சல் இல்லாமலும் இருக்கும். இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் இது மிகவும் எளிமையான உபயோகமான டிப்ஸ். வாயில் பபுள்கம் போட்டு மென்று கொண்டே வெங்காயம் நறுக்கினால் கண் எரியாது. அதுமட்டுமல்லாமல் வெங்காயத்தை தோல் உரித்து விட்டு அல்லது உரிக்காமல் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வெங்காயம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வெங்காயத்தை தண்ணீரில் ஊற வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து நறுக்கினால் கண்ணெரிச்சல் ஏற்படாது. மேலும் அந்த தண்ணீருக்குள் சிறிது கல் உப்பு போட்டு ஊற வைத்தால் கண்களிலிருந்து கண்ணீர் வராது.

மேலும் கூர்மையான கத்திகள் வெங்காயத்தை நறுக்கினால் வேகமாக நறுக்கி விடலாம். அதனால் காற்றில் சல்பர் குறைவாகவே இருக்கும். அதன் மூலமாக கண்ணெரிச்சல் குறையும். எனவே எப்போதும் கூர்மையான கத்தியை பயன்படுத்தி வெங்காயம் நறுக்குவது நல்லது. மற்றொரு டிப்ஸ் என்னவென்றால் வெங்காயம் வெட்ட தொடங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்பு அதை எடுத்து ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். அதன் பிறகு எடுத்து வெட்டினால் கண் எரிச்சலும் இருக்காது கண்ணீரும் வராது.

மேலும் வெங்காயத்தை நறுக்குவதற்கு முன் னாள் காய்கறி நறுக்கும் பலகையில் சிறிது வினிகரை எடுத்து தேய்த்துவிட்டு அதன்பிறகு வெங்காயத்தை வைத்து நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது. வெங்காயத்தை நறுக்கும் போது பக்கத்தில் ஏதேனும் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு ஒன்றை ஏற்றி வைத்துக் கொண்டு வெங்காயத்தை நறுக்கினால் கண் எரிச்சல் ஏற்படாது. எனவே வெங்காயத்தை நறுக்கும்போது இனி இதனை பின் தொடர்ந்தால் கண் எரிச்சலில் இருந்து தப்பிக்கலாம்.

Categories

Tech |