மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் வாட்ஸ்அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பின், சில நாடுகளில் WhatsAppல் “வணிகத் தேடல்” என்ற புது செயல்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக வாட்ஸ்அப் பயனாளர்கள் வாட்ஸ்அப் செயலியில் இருந்து கொண்டே எளிமையாக வணிகங்களைப் பார்க்கவும், அவர்களுடன் தொடர்புகொள்ளவும் மற்றும் நேரடியாக கொள்முதல் செய்யவும் முடியும்.
WhatsAppன் “வணிக தேடல்” அம்சத்தை இந்தோனேசியா, மெக்சிகோ, கொலம்பியா, யுகே மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்த பயனாளர்கள் பயன்படுத்த இயலும். எனினும் இந்தியாவில் WhatsApp பயன்படுத்தும் பயனாளர்களுக்கு எப்போது இவ்வசதி கிடைக்கும் என நிறுவனம் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. WhatsAppல் வணிகங்களைத் தேடுவது மற்றும் வாங்குவதற்கான வழிமுறைகள் குறித்து இங்கே பாப்போம்.
# உங்களது சாதனத்தில் உள்ள WhatsApp செயலியை திறக்கவும்.
# சாட் ஐகானைத் தேர்ந்தெடுத்த பின் “டிஸ்கவர்” என்பதனைத் தேர்ந்தெடுத்து அவற்றில் “பிஸினஸஸ்” என்பதைத் தேர்வு செய்யவேண்டும்.
# பின் உங்களது இருப்பிடத்தை எப்படிப் பகிர விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
# அடுத்ததாக கன்டினியூ என்பதை க்ளிக் செய்து உள்ளூர் வணிகங்களைப் பார்க்கலாம்.
# உங்களது இருப்பிடம் இன்றி வேறொரு இடத்தையும் நீங்கள் மேப் வாயிலாக தேர்வுசெய்து வணிகர்களை பார்க்கலாம்.
# தற்போது நீங்கள் தேடும் வணிகத்தை உள்ளிட வேண்டும்.
# பட்டியலின் மேலேயுள்ள பில்டர் சிப்பைத் டேப் செய்வதன் வாயிலாக உங்களது தேடலை மேலும் சுருக்கலாம். வகை, இருப்பிடம், ஓபன் ஸ்டேட்டஸ் (அ) கேட்டலாக் வாயிலாக வணிகங்களை பில்டர் செய்யலாம்.
# பிசினஸ் ப்ரோபைலை பார்ப்பதற்கு பிஸ்னஸ் ஆப்ஷனை டேப் செய்யவும்.
# தற்போது சாட் பட்டனை கிளிக் செய்வதன் வாயிலாக வணிகர்களுடன் உரையாடலைத் துவங்கலாம்.