Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. இயக்குனர் மணிரத்தினமாக மாறிய கௌதம் மேனன்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் மின்னலே, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, அச்சம் என்பது மடமையடா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் கௌதம் மேனன். இவர் தற்போது நடிகர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு தெலுங்கு சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அப்போது தொகுப்பாளர் கௌதம் மேனனிடம் செக்கச் சிவந்த வானம் படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தால் எப்படி இருக்கும் என்கிற அனுபவத்தை கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு கௌதம் மேனன் மணிரத்தினமாக மாறி அப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி மற்றும் அருண் விஜய் ஆகியோருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது என்றார். அதன்பிறகு அவர்களுக்கு எவ்வளவு பிசியான வேலை இருந்தாலும் நான் மணிரத்தினம் என்பதால் நான் அழைத்துடன் வந்து எனக்காக வேலை செய்து கொடுத்தார்கள் என்று கூறினார். மேலும் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |