Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்…. தொடங்கி வைத்த முதலமைச்சர்….!!!

தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

நமது தமிழ் நாட்டில் உள்ள திண்டுக்கல்லில்  முதல்முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு குடியிருப்புகள் கட்டப்பட்டது. குடியிருப்புகள்  தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களை ஒருங்கிணைந்து கட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த குடியிருப்புகளில் நூலகம், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் 17.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா  300 சதுர அடியில் 322 குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி  மூலம் நேற்று தொடங்கி வைத்துள்ளார்.

Categories

Tech |