Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. ஊழியர்களுக்கு இனி வாரத்தில் ஒருநாள் மட்டும்…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!

நெசவு தொழிலாளர்களால் உருவாக்கப்படும் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை உடுத்த மக்கள் தயக்கம் காட்டி வருவதால் நெசவுத்தொழில் நலிவடைந்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நெசவுத் தொழிலாளர்களின் நலன் கருதி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கேரளாவில் வாரத்தில் ஒரு முறை அரசு ஊழியர்கள் கதர் ஆடைகளை அணிய வேண்டும் என முதல்வர் பிரனாய் விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேரளாவில் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், மற்றும் வங்கி ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் அதாவது புதன்கிழமை கதர் ஆடையை அணிய வேண்டும். நெசவு தொழிலை பாதுகாக்கும் வகையில் வாரத்தில் ஒருநாள் ஊழியர்கள் கைத்தறி மற்றும் கதர் ஆடைகளை அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ள குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர்

Categories

Tech |