Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. எஸ்பிஐ டெபிட் கார்டில் இப்படி ஒரு வசதியா?…. வாடிக்கையாளர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வழங்கும் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளைபயன்படுத்தி உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பொருள்களை வாங்கவும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெபிட் கார்டில் உள்ள இஎம்வி சிப் கூடுதல் பாதுகாப்பு அம்சமாகும். அனைவரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை செய்யும் போது ஸ்வைப்பிங் மிஷினில் டெபிட் கார்டை நுழைத்து பணத்தை செலுத்துவது தான் வழக்கம்.

ஆனால் எஸ்பிஐ வங்கியின் இந்த புதிய டெபிட் கார்டை வைத்து ஸ்வைப்பிங் மெஷின் மேல் காட்டினால் மட்டுமே போதும். ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால் பின் நம்பர் கேட்கப்படாது. அதற்கு மேல் பணம் செலுத்தினால் பின் நம்பர் பதிவு செய்ய வேண்டும். மேலும் பின் நம்பர் இல்லாமல் நாள் ஒன்றுக்கு ஐந்து பரிவர்த்தனைகள் செய்யலாம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

Categories

Tech |