Categories
அரசியல்

அடடே சூப்பர்…. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு வசதியா?…. இதோ பாருங்க….!!!!

ஏடிஎம் மையங்கள் பொதுமக்கள் பணம் எடுப்பதற்கான மிக அத்தியாவசிய சேவையாக உள்ளது. அவசர சூழலில் பணமெடுக்க ஏடிஎம் எந்திரங்கள் மக்களுக்கு பெரிதும் உதவுகின்றன. அதேசமயம் ஏடிஎம் மோசடிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏடிஎம் மோசடிகளை தடுப்பதற்கு வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கி சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் மோசடிகளை தடுப்பது பற்றி வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

அவ்வகையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ OTP வாயிலான பண பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி-ஐ பதிவு செய்தால் மட்டுமே ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முடியும். பத்தாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை எடுக்க மட்டுமே OTP வழி பரிவர்த்தனை தேவைப்படுகின்றது. இந்த வசதி கடன் 2020ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஓடிபி வாயிலான பணப் பரிவர்த்தனையை பயன்படுத்துவது எப்படி?

* ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது உங்களிடம் ஓடிபி கேட்கப்படும்

* உங்கள் மொபைல் நம்பருக்கு ஓடிபி பாஸ்வோர்ட் வரும்

* ஓடிபி என்பத் 4 இலக்க எண் கொண்ட பாஸ்வோர்ட்

* ஏடிஎம்மில் ஓடிபி நம்பரை பதிவிட வேண்டும்.

* இனி நீங்கள் எடுக்க வேண்டிய பணம் வெளியே வரும்

* 10,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை எடுக்கும்போது மட்டுமே ஓடிபி தேவை

Categories

Tech |